Sunday, July 30, 2017

சித்தர்கள் 18

*சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._

*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.

*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.

*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.

*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.

*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.

*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.

*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.

*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.

*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.

*10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.

*11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.

*12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.

*13. நந்தீஸ்வரர்* – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.

*14. இடைக்காடர்* – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.

*15. மச்சமுனி* – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

*16. கருவூரார்* – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.

*17. போகர்* – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

*18. பாம்பாட்டி சித்தர்* – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.

*(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி)* உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.

_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_

*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்._

Saturday, July 29, 2017

பொது அறிவு வினா விடை

50+ ஆண்டுகள் வினா விடை- TNPSC குரூப் தேர்வு

1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது? 1935

2. தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது? 1935

3. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது? 1935

4. இந்திய தேசிய ஒலிபரப்புக் கழகம் இந்தியா ரேடியோ என மாற்றப்பட்ட வருடம் 1936

5. "சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான 'பாம்பே அறிக்கை"" வெளியிடப்பட்ட ஆண்டு? 1936

6. அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1937

7. தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1937

8. இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு 1937

9. இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது? 1937

10. வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்? 1937

11. இந்தியாவிலிருந்து பர்மா எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது? 1937

12. ஜனசக்தி இதழை ஜீவானந்தம் தொடங்கிய ஆண்டு 1937

13. சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியைத் துவங்கிய ஆண்டு 1938

14. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பதவியேற்ற ஆண்டு எது? 1938

15. இரண்டாம் உலகப்போர் எப்போது தொடங்கியது? 1939

16. காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான ஆண்டு 1940

17. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு நடந்தது? 1942

18. இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு 1944

19. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது? 1944

20. "பெரியார் ஜஸ்டிஸ் கட்சியை திராவிடக் கழகமாக மாற்றி அமைத்த வருடம் ? 1944

21. ஐ.நா.சபை எந்த ஆண்டு தொடங்கியது? 1945

22. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது? 1945

23. "இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக எந்த ஆண்டு சேர்ந்தது?" 1945

24. சென்னை அரசு இசைக்கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1945

25. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1946

26. கடைசியாக காந்தி தமிழகம் வந்த ஆண்டு 1946

27. ஜெனிவாவில் உலகத்தர அமைப்பு துவங்கப்பட்ட ஆண்டு 1947

28. கிரிப்ஸ் குழு இந்தியாவிற்கு எப்போது வந்தது? 1942

29. தமிழ்நாட்டில் முதன் முதலில் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு 1947

30. தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட ஆண்டு 1948

31. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் எந்த வருடம் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்? 1948

32. சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது? 1948

33. கட்டாயக் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1949

34. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1949

35. இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டு எது ? 1949

36. தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் தொடங்கப்பட்ட ஆண்டு 1949

37. இந்திய திட்டக் கமிசன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1950

38. "ஓர் ஆலோசனை அமைப்பாக செயல்படும் இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ?1950



39. அன்னை தெரசா மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி நிறுவப்பட்ட ஆண்டு 1950



40. இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 1950



41. முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு எது? 1951



42. ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கப்பட்ட வருடம் எது? 1951



43. முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது? 1951



44. சமுதாய வளர்ச்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு எது? 1952



45. தேசிய வளர்ச்சிக் குழுவினை நேருவின் அரசு எப்போது ஏற்படுத்தியது? 1952



46. குடும்பக்கட்டுப்பாடு திட்டம் நமது நாடு அறிமுகப்படுத்திய வருடம் எது ? 1952



47. முதல் பொதுத் தேர்தல் எப்போது நடந்தது? 1952



48. ஆந்திர மாநிலம் எந்த ஆண்டு உருவாகியது? 1953



49. குடும்ப நலத்திட்டம் கொள்கை இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட வருடம் எது?? 1953



50. குலக்கல்வி முறையை இராஜாஜி கொண்டு வந்த ஆண்டு எது? 1953



51. இராஜாஜி சுதந்திரா கட்சியை ஆரம்பித்த ஆண்டு எது? 1954



52. குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட ஆண்டு எது ? 1954



53. தமிழகத்தில் பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1955



54. தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1955



55. எப்போது குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டது ? 1955



56. இந்து திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?. 1955



57. இம்பீரியல் பேங்க் எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என அழைக்கப்பட்டது? 1955



58. ஆவடியில் எந்த ஆண்டு காங்கிரஸ் மாநாடு நடந்தது ? 1955



59. கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்த ஆண்டு எது? 1956



60. ஒலிம்பிக் போட்டிகள் முதன்முதலில் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான ஆண்டு எது? 1956



61. இந்து வாரிசுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது? 1956



62. மாநில வர்த்தக நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1956



63. பெண்களுக்கு சொத்துரிமைச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது? 1956



64. "எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கமிஷன் எப்போது உருவாக்கப்பட்டது ? 1956



65. மத்திய அரசாங்கத்தின் சமுதாய வளர்ச்சி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1956



66. கிண்டி தொழிற்பேட்டை தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1957



67. தசம நாணய முறை இந்தியாவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1957



68. இந்திய நாணயங்களில் எப்போது தசம ஸ்தான அமைப்பு செயலாக்கப்பட்டது ? 1957



69. தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1957



70. இந்தியாவில் இரண்டாவது பொதுத்தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது? 1957



71. இந்தியாவில் டெசிமல் முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1957



72. தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1958



73. தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1959



74. முதன்முதலில் தூர்தர்ஷன் எப்போது துவங்கப்பட்டது? 1959



75. முதன் முதலாக எஸ்.டி.டி. அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? 1959



76. இந்தியாவில் வரதட்சனை தடைச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது? 1961



77. இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் அர்ஜுனா விருது எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது? 1961



78. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்கப்பட்;ட ஆண்டு 1961



79. தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (நில உச்ச வரம்பு நிர்ணயித்தல்)சட்டம். 1961



80. இந்தியாவில் மூன்றாவது பொதுத்தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது? 1962



81. கோவா இந்தியக் குடியரசில் இணைக்கப்பட்ட வருடம் ? 1962



82. முதன் முதலாக எந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களில் ஆதிக்கத்தை இழந்தது? 1962



83. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற ஆண்டு 1962



84. காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரான ஆண்டு 1963



85. காமராஜர் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு 1963



86. தமிழ்நாடு நகர்ப்புற நிலவரிச் சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? 1963



87. புயலால் தனுஷ்கோடி அழிந்த ஆண்டு 1964



88. வக்கீல்கள் கருப்பு உடை அணிவது எப்போது வந்தது? 1964



89. தமிழகத்தில் மும்மொழித்திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது? 1965



90. தமிழ்நாடு சிறுதொழில்கள் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1965



84.மலைவாழினத்தவரைப்பொருத்தவரை மற்ற கவர்னருக்கில்லாத அதிகாரம் எந்த மாநில கவர்னருக்கு உள்ளது
    அஸ்ஸாம் , மேகாலயா , திரிபுரா , மிசோராம்
85 அதிக மக்களவௌ உறுப்பினர்களைக்கொண்ட மாநிலம் உத்திரப்பிரதேசம் – 42
87 ஜனாதிபதியின் நம்பைக்கை இருக்கும்வரை கவர்னர் பதவியில் இருக்கலாம். அல்லது 5 ஆண்டுகள்
88.தேர்தல் வழக்குகள் உச்சநீதிமன்றத்தால் விசாரிக்கப்படும்
89 திட்டக்க்கமிசம் 1950 ஆண்டு ஏற்படுத்தப்பட்ட்து
90 ஜைன் கமிசன் இந்திராகாந்தி கொலை வழக்குபற்றி விசாரித்த்து
91. தேசிய நெருக்கடியின்போது அடிப்படை உரிமை நிறுத்திவைக்கப்படும்
92 திட்டக்கமிசன் ஒரு Advisory body
93. பிரதம மந்திரி  25 வயது பூர்த்தியடைந்திருக்கவேண்டும்
94 திட்டக்கமிசன் அரசியலமைப்புப்பதவி அல்ல
95 அரசியல் நிர்ணய சபை 06-11-1946 அன்று அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நிறுவப்பட்டது

Wednesday, July 19, 2017

தமிழ் ஆசிரியர்

ஆதி கவி --- வால்மீகி

* அந்தக கவி -- வீரராகவர்

* கவியோகி -- சுத்தானந்த பாரதி

* பாவலர் ஏறு -- சோமசுந்தர பாரதியார்

* பண்டிதமணி -- கதிரேசன் செட்டியார்

* குறிஞ்சி கோமான் -- கபிலர்

* பிரபந்த வேந்தர் -- குமரகுருபரர்

* சித்திரக்கார புலி -- மகேந்திரவர்மன் 2

* சொல்லின் செல்வர் ( இதிகாசம் ) -- அனுமன்

* சொல்லின் செல்வர் ( இலக்கியம் ) -- ரா.பி.சேதுப்பிள்ளை

* சொல்லின் செல்வர் ( அரசியல் ) -- EVK.சம்பத்

* நவீன கம்பர் -- மீனாட்சி சுந்தரம் பிள்ளை

* பதிப்புச் செம்மல் -- ஆறுமுக நாவலர்

* தமிழ் பிராமணர், தத்துவ போதகர்-- ராபர்ட் டி நொபிலி

* இஸ்லாமிய தாயுமானவர் -- குணங்குடி மஸ்தான்

* செந்தமிழ் தேனி, பைந்தமிழ் தேர்ப்பாகன்- - பாரதியார்

* கிறித்தவ கம்பர் -- HA. கிருஷ்ண பிள்ளை

* இஸ்லாமிய கம்பர் -- உமறுப்புலவர்

* ஒல்காப் புலவர் -- தொல்காப்பியர்

* காளக்கவி -- ஒட்டக்கூத்தர்

* இரசிகமணி -- டி.கே.சிதம்பரனார்

* உருவக கவிஞர் -- நா.காமராசன்

* அலர் புலவர் -- உலோச்சனார்

* திருப்பாவை ஜீயர் -- இராமானுசர்

* பட்டர்பிரான் -- பெரியாழ்வார்

* திவ்விய கவி -- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

* வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, இந்து புத்த சமய மேதை, சன்மார்க்கம் கண்ட மாருதம் -- முத்துராமலிங்க தேவர்.......

Sunday, July 16, 2017

தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்

1. தேசிய மருத்துவ அறிவியல் கழகம்= டெல்லி

2. ஆயுர்வேத நிறுவனம்= ஜெய்ப்பூர்

3. சித்த மருத்துவ நிறுனம்= சென்னை

4. யுனானி மருத்துவ நிறுவனம்= பெங்களூரு

5. ஹோமியோபதி நிறுவனம்= கொல்கத்தா

6. இயற்கை உணவு நிறுவனம்= பூனே

7. மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்= டெல்லி

8. காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்= டேராடூன்

9. மலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்= ஜோர்காட்(அசாம்)

10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம் =  ஜோத்பூர் (ராஜஸ்தான்)

11. வெப்பமண்டலக்காடுகள் ஆ.நி =ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)

12. இமயமலைக்காடுகள் ஆ.நி= சிம்லா

13. காபி வாரியம் ஆ.நி= பெங்களூரு

14. ரப்பர் வாரியம் ஆ.நி =கோட்டயம்

15. தேயிலை வாரியம் ஆ.நி= கொல்கத்தா

16. புகையிலை வாரியம்=குண்டூர்

17. நறுமண பொருட்கள் வாரியம்= கொச்சி

18. இந்திய வைர நிறுவனம்= சூரத்

19. தேசிய நீதித்துறை நிறுவனம்= போபால்

20. சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி= ஹைதராபாத்

21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு= வாரணாசி

22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு= சித்தரன்ஜன்

23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF)= கபூர்தலா(பஞ்சாப்)

24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF)= பெரம்பூர்(சென்னை)

25. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு= பெங்களூரு

26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம்= மும்பை

27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம்= கோவா

28. தேசிய கால்நடை ஆ.நி= இசாத் நகர்(குஜராத்)

29. தேசிய வேளாண்மை ஆ.நி= டெல்லி

30. தேசிய நீரியல் நிறுவனம்= ரூர்கி(உத்தரகாண்ட்)

31. இந்திய அறிவியல் நிறுவனம்= பெங்களூரு

32. இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிறுவனம்= டேராடூன்

33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நி.= ஹைதராபாத்

34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நி.= போர்ட்-ப்ளேர்(அந்தமான்)

35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நி.= டேராடூன்

36. தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம்= லக்னோ

37. உயிரியல் ஆய்வகம்= பாலம்பூர்(ஹிமாச்சல்)

38. தேசிய மூளை ஆராய்ச்சி நி.= மானோசர்(ஒரிசா).

*மயங்கொலிச் சொற்கள்*

மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை *மயங்கொலிச் சொற்கள்* என்றழைக்கப்படுகின்றன.

தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள்:

*ல, ழ, ள பொருள் வேறுபாடு*


அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை
அழகு - வனப்பு
அளகு - சேவல், பெண்கூகை
அலகம் - திப்பிலி
அளகம் - வெள்ளெருக்கு, நீர்
அலகை - கற்றாழை, பேய்
அளகை - அளகாபுரி, பெண்
அழம் - பிணம்
அலம் - கலப்பை
அளம் - உப்பு
அலத்தல் - அலட்டல், அலைதல்
அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
அலவன் - ஆண்நண்டு
அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
அழி - அழித்துவிடு
அலி - பேடி, காகம், விருச்சிகராசி
அளி - கருணை, கள், வண்டு
அல்லல் - துன்பம்
அள்ளல் - வாரி எடுத்தல்
அழை - கூப்பிடு
அலை - கடல், நீரலை, அலைதல்
அளை - தயிர், நண்டு, புற்று
அவல் - பள்ளம், உணவுப் பொருள்
அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
அல் - இரவு
அள் - அள்ளி எடு, நெருக்கம்
உலவு - நட
உளவு - ஒற்று
உழவு - கலப்பையால் உழுதல்
உழி - இடம், பொழுது
உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு
உளு - உளுத்துப் போதல்
உலை - கொல்லன் உலை, நீருலை
உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
உளை - பிடரி மயிர், சேறு, தலை
உழுவை - புலி
உளுவை - மீன்வகை
எல் - கல், மாலை, சூரியன்
எள் - எண்ணெய்வித்து, நிந்தை
எலு - கரடி
எழு - எழுந்திரு, தூண்
ஒலி - சப்தம், நாதம், காற்று
ஒழி - அழி, தவிர், கொல், துற
ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
ஒல் - ஒலிக்குறிப்பு
ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
கலகம் - போர், அமளி, இரைச்சல்
கழகம் - சங்கம், கூட்டமைப்பு
கழங்கம் - கழங்கு, விளையாட்டுக் கருவி
களங்கம் - குற்றம், அழுக்கு
கலி - கலியுகம், பாவகை, சனி
கழி - கோல், மிகுதி, உப்பளம்
களி - மகிழ்வு, இன்பம்
கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
கழை - மூங்கில், கரும்பு, புனர்பூசம்
களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
கல் - மலை, பாறை, சிறுகல்
கள் - மது, தேன்
கலம் - கப்பல், பாத்திரம்
களம் - இடம், போர்க்களம், இருள்
காலி - ஒன்றுமில்லாதது, வெற்றிடம்
காளி - துர்க்கை, மாயை
காழி - சீர்காழி (ஊர்)
காலை - பொழுது, விடியற்பொழுது
காளை - காளைமாடு, இளைஞன்
காலம் - பொழுது, நேரம்
காளம் - எட்டிமரம், சூலம்
கிலி - அச்சம், பயம்
கிழி - கிழித்துவிடு, முடிப்பு (பொன்)
கிளி - பறவை, வெட்டுக்கிளி
கிழவி - முதியவள், மூதாட்டி
கிளவி - சொல், மொழி
குலி - மனைவி
குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு
குளி -நீராடு
குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம், குடி
குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
குலை - கொத்து, மனம் தடுமாறுதல்
குழை - குண்டலம், குழைந்துபோதல்
குலவி - மகிழ்ந்திருத்தல்
குழவி - குழந்தை, இளமை, யானைக் கன்று அம்மிக்கல்
குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
குலிகம் -சிவப்பு, இலுப்பை
குளிகம் -மருந்து, மாத்திரை
குவலை -துளசி, கஞ்சா
குவளை - குவளை மலர், சொம்பு, ஒரு பேரெண்
கூலம் - தானியம், கடைத்தெரு
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி(யார்) - பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
கொலு - அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாக வீற்றிருத்தல்
கொழு - மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு கொழுத்து இருத்தல்
கொளு - புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய்
கொலை - கொல்லுதல்
கொளை - கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம்
கொல்லாமை - கொலை செய்யாமை
கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை, அடங்காமை
கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு மலை
கொள்ளி - கொள்ளிக்கட்டை
கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
கொள்ளை - திருடுதல், மிகுதி
கோலம் - அழகு, அலங்காரம்
கோளம் - உருண்டை, வட்டம்
கோலை - மிளகு
கோழை - வீரமற்றவன், கபம்
கோளை - குவளை, எலி
கோல் - மரக்கொம்பு, அம்பு, குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
கோள் - கிரகம்
கோலி - இலந்தை, விளையாடும் குண்டு
கோழி - உறையூர், விட்டில், பறவை
கோளி - பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம்
சலம் - நீர், சிறுநீர், குளிர்
சளம் - பொய், துன்பம், வஞ்சனை
சாலை - பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம்
சாளை - கடல்மீன்
சாழை - குடிசை, குச்சு
சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
சுளித்தல் - முறித்தல், சினத்தல்
சூலை - வயிற்று நோய்
சூளை - செங்கல் சூளை
சூல் - கர்ப்பம்
சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
சூள் - சபதம்
சேல் - மீன்
சேள் - மேலிடம்
சோலி - ரவிக்கை, காரியம்
சோழி - பலகரை
சோளி - கூடைவகை
தவளை - ஓர் உயிரி
தவலை - பாத்திரம்
தலம் - இடம், பூமி
தழம் - தைலம்
தளம் - மேடை, மாடி வீட்டின் அடுக்கு
தழை - தாவர உறுப்பு
தலை - மண்டை
தளை - விலங்கு
தாலம் - உலகம், தேன்
தாளம் - இசைக்கருவி, ஜதி
தாலி - மங்கலநாண்
தாழி - கடல், குடம், பரணி பெரியபாண்டம்
தாளி - தாளித்தல், பனைதால் - நாக்கு, தாலாட்டு
தாழ் - தாழ்தல், குனிதல்
தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி, காகிதம்.
துலக்கம் - ஒளி, தெளிவு
துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம், ஒளி
துலம் - கோரை, கனம்
துளம் - மாதுளை, மயிலிறகு
துலி - பெண் ஆமை
துழி - பள்ளம்
துளி - மழைத்துளி, திவலை, சிறிய அளவு
துலை - ஒப்பு, கனம்
துளை - துவாரம், வாயில்
தூலி - எழுதுகோல், எழுத்தாணி
தூளி - புழுதி, குதிரை
தெழித்தல் - கோபித்தல், முழங்குதல், அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல், விதைத்தல்
தெல் - அஞ்சுதல்
தெள் - தெளிவான
தோலன் - அற்பன்
தோழன் - நண்பன்
தோலி - பிசின், ஒருவகை மீன்
தோழி - பாங்கி, நட்பால் நெருக்கமானவள்
தோளி - அவுரி (ஒருவகை குத்துச்செடி), அரக்கு
தோல் - சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி
தோள் - புயம், வீரம்
நலன் - நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம்,
நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
நலி - நோய்
நளி - குளிர்ச்சி, பெருமை
நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
நல் - நல்ல
நள் - இரவு, நடு, நள்ளிரவு
நாலம் - பூவின் காம்பு
நாழம் - இழிவுரை, வசவு
நாளம் - பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்
நாலி - முத்து, கந்தை ஆடை
நாழி - உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி
நாளி - கல், நாய்
நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
நாழிகை - வட்டம், கடிகாரம்
நால் - நான்கு
நாழ் - குற்றம், செருக்கு
நாள் - காலம், திதி
நீலம் - ஒரு நிறம், கருங்குவளை, இருள்
நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
நீல் - நீலம், காற்று
நீள் - நீளம், ஒளி
பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி, சேனை, வன்மை, உறுதி, எடை
பழம் - கனி, முதுமை
பல்லி - சிற்றூர், இடையர் ஊர், உழுகருவி, ஓர் உயிரி, வண்டியுறுப்பு
பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில், குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை, பள்ளிக்கூடம்
பலி - பலியிடுதல், பலியுயிர்
பழி - குற்றம்
பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பாழ் - வீண், வெறுமை
பீழை - துன்பம்
பீளை - கண் அழுக்கு
புலி - காட்டு விலங்கு
புளி - புளியமரம், புளியங்காய்
புலை - புலால், ஊன், கீழ்மை
புழை - துளை, வாயில், நரகம்
புகல் - அடைக்கலம்
புகழ் - பெருமை
புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
புள் - பறவை
பூலம் - புற்கட்டு
பூளம் - பூவரசு
பூழை - துவாரம், கோபுரவாயில்
பூளை - பூளைச்செடி, இலவம் பஞ்சு
பாலி - தானியக் குவியல், தூற்றாத தானியம்
பாழி - கொடுத்தல், ஈதல்
பாளி - வரப்பு, எல்லை
பாலிவு - அழகு, நிறைவு
பாழிவு - பொழிதல், மேன்மை
போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
போளி - இனிப்புப் பண்டம்
பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
பொழிதல் - ஈதல், கொடுத்தல், சொரிதல், பெய்தல், நிறைதல்
மலம் - அழுக்கு, பாவம்
மழம் - இளமை, குழந்தை
மலை - குன்று, பொருப்பு, வெற்பு,சிகரம்
மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
மழைத்தல் - மழை பெய்திருத்தல், குளிர்ந்திருத்தல்
மல்லிகை - மாலை, கழுத்தணி, வரிசை
மாளிகை - அரண்மனை, கோயில்
மாலை - அந்திப்பொழுது, பூமாலை
மாழை - மயக்கம், இளமை, அழகு
மாளை - புளியம்பட்டை
மால் - திருமால், மயக்கம், அருகன், இந்திரன், பெருமை, மேகம்
மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
முழை - குகை
முளை - முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
முழி - விழி (விழித்தல்)
முளி - மரக்கணு, விரல்முளி, வாட்டம்
மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை, கோணம்
மூலை - இரு கோடுகள் சந்திக்கும் இடம்
மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர் உறுப்பு(முதன்மைப் பகுதி)
மெல்ல - மென்று தின்பது
மெள்ள - மெதுவாக
மாலி - மொளலி கிரீடம்
மாழி - மேழி, கலப்பை
மாளி - துணிமூட்டை
வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வளம் - வளமை, அழகு
வலவன் - திருமால்
வளவன் - சோழன், வேளாளன்
வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வளன் - செழுமை, வளப்பன்
வழப்பம் - வழக்கம், இயல்பு
வளப்பம் - வளமை, செழிப்பு
வலி - நோய், வலிமை, துன்பம்
வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
வளி - காற்று
வலை - மீன் முதலியன பிடிக்கும் ஒரு கருவி
வழை - சுரபுன்னை, புதுமை, இளமை
வளை - கை வளையல், எலி வளை
வல் - வலிமை, விரைவு, திறமை
வள் - ஒலிக்குறிப்புச் சொல்
வல்லம் - வாழை, ஓர் ஊர்
வள்ளம் - மரக்கலம், படகு, அளவு, தொன்னை
வல்லி - பூமி, பெண், பிரிதல், படர் கொடி
வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம், சந்திரன்
வலு - வலிமை, பலம், பற்று
வழு - குற்றம், தவறு, பழிப்புரை, கேடு
வளு - இளமை, இளைய
வாலி - கிஷ்கிந்தை அரசன் (இராமாயணம்)
வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு காதணி
வாலை - இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
வாழை - வாழைமரம்
வாளை - வாளை மீன்
வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
வாழ் - வாழ்வாயாக (என்று வாழ்த்துதல்)
வாள் - போர்வாள், நீண்டகத்தி
விலா - விலா எலும்பு
விழா - திருவிழா, கொண்டாட்டம்
விளா - இளமை, வெண்மை, நிணம்
விழி - கண், கருவிழி
விளி - கூப்பிடு, அழை, ஏழிசையில் ஒன்று
விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
விழை - விரும்பு, ஆசைப்படு
விளை - ஒரு மீன்வகை, விளைவி (விளைச்சல்)
விலக்கு - விலக்கி விடு, தவிர்
விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
விலங்கு - பூட்டு, கை, கைகளைப் பிணிக்கும் கருவி, மிருகம்
விளங்கு - திகழ் (திகழ்தல்), சிற்றரத்தை (மூலிகை வகை)
வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
வேலம் - வேலமரம், தோட்டம்
வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
வேல் - வேலாயுதம்
வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன், ஆசை
வேலை - பணி, கடல்
வேளை - பொழுது, நேரம், ஒருவகைக் கீரை

History and national movement

கிலாபத் இயக்கம் - அலி சகோதரர்கள்

ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசன்ட் , திலகர்

சிவப்புச்சட்டை இயக்கம் - கான் அப்துல் கபர்கான்

பூமிதான இயக்கம் - ஆச்சார்ய வினோபாவே

சிப்கோ இயக்கம் - சுந்தர்லால் பகுகுணா

ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி

பிரம்ம சமாஜம் - இராஜாராம் மோகன்ராய்

அவ்வை இல்லம் - முத்துலட்சுமி ரெட்டி

சாரதா சதன் - பண்டித ராமாபாய்

சுயமரியாதை இயக்கம் - பெரியார் ஈ.வே. ராமசாமி

வரிகொடா இயக்கம் - வல்லபாய்படேல்

சாரணர் படை - பேடன் பவுல்

இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்

ராமகிருஷ்ணா மிஷன் - சுவாமி விவேகானந்தர்

செஞ்சிலுவை சங்கம் - ஹென்றி டூனாண்ட்

இந்திய தேசிய ராணுவம் - சுபாஷ் சந்திரபோஸ்

சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ்

சுதந்திர கட்சி - ராஜாஜி

இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே

சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சிதம்பரனார்

1. கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்

2. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி

3. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே

4. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்

5. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி

6. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி

7. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி

8. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி

16. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி

17. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி

18. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்

19. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே

CA

நடப்பு நிகழ்வுகள் :
=================
1 ) M.S சுவாமிநாதன் விருது -2017 ?
( விவசாய விருது )
  விடை : ராயப்பா ராமப்பா ஹன்சிலால்

2 ) UNESCO SPECE PRIZE -2017 ?
   ( பீலிக்‌ஷ் ஹேவவே போய்னி அமைதி விருது )
விடை :  குய்ஷி நிகோலின் & SOS மெடிட்டரரேனி

3 ) டூரிங் விருது -2017
    ( Nopal Prize for Computing )
   விடை : டிம் பெர்னரஷ் லீ

4 ) தங்கமயில் விருது -2017 ?
  விடை : Yes Bank &  Bangalore City Police

5 ) UNESCO PRESS FREEDOM PRIZE -2017 ?
( கிலெர்னோ கானோ உலக அமைதி விருது )
 விடை : தாவித் இசாக்

6 ) கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருது ?
   ( Green Nobel )
   விடை : பிரபுல்லா சமந்தாரா ( ஆசியா )

Current Affairs

👯 பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக சமீபத்தில் வெளியான திட்டங்கள் மற்றும் மொபைல் செயலிகள் :

1. Operation Durga- ஹரியானா
2. Anti Romeo Squad- UP
3. Anti Majnoo Squad- மத்திய பிரதேசம்
4. I feel safe app- டெல்லி போலிஸ்
5. HIMMAT app- டெல்லி
6. Suraksha App- பெங்களூர்
7. அம்மாவின் அரண்- தமிழ்நாடு(ADMK)
8. Pink Hoysalas- பெங்களூர்

✈ இராணுவப் போர் பயிற்சிகள்(Military) :
1. Ex Maitree- India & Thailand
2. Ex-Nomadic Elephant- India & Magnolia
3. Ex-Suriya Kiran- India&Nepal (Uthrakand)
4. Ex-Al Nagah-li- India & Oman (Himachael Pradesh)
5. Ex-KHANJAR-IV- India & Krgystan
6. Ex-EKUVERIN- India & Maldives
7. Ex-Sarvatra Prahar- இந்திய இராணுவத்தின் வருடாந்திர பயிற்சி(Nashik)

⛵ கப்பற்படை பயிற்சிகள்(Naval) :
1. Ex-AUSINDEX-17- India & Australia
2. Ex-Varuna- India & France
3. Ex-INDRA- India & Russia
4. Ex-KONKAN- India & UK
5. TROPEX-17- இந்திய கப்பற்படையின் வருடாந்திர பயிற்சி

✈ விமானப்படை(Air Force) :

1. Ex-BRIDGE-IV- India & Oman(Gujarat)

கடலோர காவற்படை (Coastal Guard)
1. COPRAT- India & Indonesia

😄 மற்ற நாடுகளின் பயிற்சிகள் :

1. Ex- Sagarthmala Friendship 2017- India & Nepal(Military)

2. Ex-Foal Eagle War- US & South Korea

3. Ex-Grand Prophet- ஈரான் இராணுவத்தின் ஏவுகணை பயிற்சி

4. Ex-Aman-17- Pakistan

💡 மனிதநேய உதவி மற்றும் பேரீடர் மீட்பு  பயிற்சிகள்(HADR Exercise)

1. Siam Bharth 17- India & Thailand- மனிதநேய உதவி மற்றும் பேரீடர் மீட்பு பயிற்சி

2. KARAVALI KARUNYA- இந்திய படைகளின் பேரீடர் மீட்பு பயிற்சி கர்நாடக மாநிலம் "Karvar" கப்பற்படை தளத்தில் நடைபெற்றது

🍀 பிற பயிற்சிகள் :

1. தேசிய பேரீடர் மேலாண்மை முகமையின்  முதல் காட்டுத்தீயணைப்பு பயிற்சி "உத்ரகாண்ட்" மாநிலத்தில் நடைபெற்றது

Tuesday, July 4, 2017

*குறள் பற்றிய செய்திகள்:*

1. திருவள்ளுவர்  ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாள்.

2.    திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்

3.    திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.

4.    திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.

5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.

6.    திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.

7.    திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.

8.    திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.

9.    திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.

10.    திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.

11.    திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.

12.    குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.

13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.

14.    நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.

15.    சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

16.    திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.

17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணை யாக வைக்கப்பட்டுள்ளது.

18.    திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.

19.    திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.

20.    திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.

21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு

சிரோன்மணி.

22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள் ளார்.

23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக் கனி என்பர்.

24.    திருக்குறளை 1812ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

25.    வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.

26.    வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதி தாசன்.

27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.

28.    திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.

29.    திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.

30.    திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.

31.    திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து ஔ

32.    திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.

33.    திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.

34.    திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை

35.    திருக்குறளில் உயிரினும் மேலான தாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.

36.    காலமும் இடமும் கருதிச் செயலாற்றினால் உலகை வெல்லலாம்.

37.  திருக்குறளை அனைத்துச் சமயங் களும் ஏற்றுப் போற்றுகின்றன.

38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.

39.  திருவள்ளுவமாலை திருக்குறளுக்கு எழுந்த புகழ்மாலை

40.    திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப்படுகிறது.

41.    திருக்குறளை முதலில் பயிற்றுவித் தவர் வள்ளலார் இராமலிங்கம்.