புதுடில்லி: நாட்டில் இனிமேல், வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்தும் வகையில், புகைகக்காத பி.எஸ் - 4 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பி.எஸ்., என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம். வாகனங்கள் வெளியிடும் புகை மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில், 2000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், பி.எஸ் - 3 தொழில்நுட்பம், 2005ல் டில்லி, சென்னை உட்பட 13 நகரங்களில் அறிமுகப்படுத்தி, பின்னர் நாடு முழுவதும், 2010ல் விஸ்தரிக்கப்படது. பி.எஸ் - 4 தொழில்நுட்பம் 2016 முதல், 13 நகரங்களில் அமலுக்கு வந்தது. வரும், ஏப்ரல், 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
இந்த சூழ்நிலையில், பி.எஸ் - 3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
இது குறித்த, 10 அம்சங்கள்:
1. வரும் ஏப்ரல், 1ம் தேதி முதல், பி.எஸ் - 3 தொழில்நுட்பத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் முதல், இந்த விஷயத்தில் நிலவி வந்த குழப்பம் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
2. நடப்பு மார்ச் மாதத்தில் மிச்சம் உள்ள நாட்களில், பி.எஸ் - 3 வாகனங்களை விற்றுவிடுங்கள் என, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியது. ஆனால், உற்பத்தி நிறுவனங்கள்,
அது சாத்தியமில்லாத ஒன்று' என்று கூறி விட்டன. எனவே, இந்த வாகனங்களை, பி.எஸ் - 4 தொழில்நுட்பத்திற்கு மாற்ற வேண்டும். இல்லாவிடில், பி.எஸ் - 3 தொழில்நுட்பத்திற்கு அனுமதி உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.
3. ‛ உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும். இல்லாவிடில் நஷ்டம் ஏற்படும் என்ற உற்பத்தி நிறுவனங்களின் வாதத்தை ஏற்க முடியாது. இவற்றை விட, நாட்டு மக்களின் உடல் நலம் முக்கியம்' என,சுப்ரீம் கோர்ட் கூறி விட்டது. இதை, சுற்றுசூழல் ஆர்வலர்கள், சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
4. ஏப்ரல், 1ம் தேதி முதல், பி.எஸ் - 4 வாகனங்கள் மட்டும் தான் விற்பனை என்ற உத்தரவில் சலுகை காட்டும்படி, கடந்த மார்ச், 20ம் தேதி வாகன உற்பத்தி நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். உடனே, சுப்ரீம் கோர்ட், பி.எஸ் - 3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு, விற்பனையாாகமல் உள்ள வாகனங்கள் எண்ணிக்கையை தெரிவிக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி, 96 ஆயிரம் சரக்கு வாகனங்கள்; 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள்; 40 ஆயிரம் மூன்று சக்கர வாகனங்கள், 16 கார்கள் இன்னும் விற்பனையாகவில்லை என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கணக்கு தெரிவிக்கப்பட்டது.
5. பி.எஸ் - 4 தொழில்நுட்பம், ஏற்கனவே 13 நகரங்களில் அமலில் உள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச், 31ம் தேதிக்குள் நாடு முழுவதும் அமலாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6. மத்திய அரசு, 2014 மார்ச் மாதமே ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 2016 ஏப்ரல், 1ம் தேதிக்கு பிறகு அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும், பி.எஸ் - 4தொழில்நுட்பத்தின் கீழ் தான் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களும் 2017 ஏப்ரல் 1ம் தேதிக்குள், மாற்றப்பட்டு இருக்க வேண்டும் என, அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.
இது தான், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு அடிப்படை விஷயம். மாருதி சுசூகி, ஹுண்டாய், பஜாஜ் உள்ளிட்ட சில வாகன உற்பத்தி நிறுவனங்கள், இந்த உத்தரவுக்கு உட்பட்டு, தங்களின் வாகன தயாரிப்பை ஏற்கனவே மாற்றி அமைத்து விட்டன.
7. வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் டீலர்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடம் நிலுவையில் உள்ள பி.எஸ் - 3 வாகனங்களை மட்டுமாவது விற்பனை செய்ய அனுமதி கேட்டன. ஆனால், இந்த கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்து விட்டது.
8. பி.எஸ் - 3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்ற உத்தரவு, உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டும் தான். இவ்வகை வாகனங்களை ஏற்கனவே வாங்கியவர்கள், முன்பதிவு செய்தவர்கள், முன்பதிவு செய்து இன்னும் வாகன டெலிவரி பெறாதவர்களுக்கு பொருந்தாது.
9. பி.எஸ் - 3 கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை ஏற்கனவே வைத்து இருப்பவர்கள் அவற்றை மற்றவர்களுக்கு விற்பனை செய்யலாம். அதே போல், செகன்ட் ேஹண்ட் விற்பனை சந்தையில் அந்த வாகனங்களை வாங்கலாம். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு, புதிய வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
10. பி.எஸ் - 4 தொழில்நுட்ப கட்டுப்பாடு வாகனங்களுக்கு மட்டுமல்ல, பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் தான். இந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் நாடு முழுவதும் கிடைக்கின்றன. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பி.எஸ் 3 வாகனங்களுக்கும் இவ்வகை பெட்ரோல் மற்றும் டீசலை பயன்படுத்தலாம்.

No comments:
Post a Comment