Sunday, March 5, 2017

*தமிழ் இலக்கியம் - இராமாயணம்

எழுத்துச்சீர்திருத்தம்போல் தமிழில் வடமொழிச்
சொற்களை மொழிபெயர்த்து தமிழ்ப்படுத்தியதில் கம்பருக்கு
பெரும் பங்குஉண்டு.

ராமன்-இராமன்

ராவணன்-இராவணன்

லெக்ஷ்மணன்-இலக்குவன்

விபீஷணன்-வீடணன்

ஹனுமன்-அனுமன்

ஹிருதயம்-இருதயம்-இதயம்

ராமாயணத்தை வடமொழியில் இயற்றியவர்-வான்மீகி

 தனது ராமாயணத்திற்கு கம்பர் இட்டபெயர்-
இராமாவதாரம்

நூல்வகை எது?
வழிநூல்

ஆதிகவி யார்?கம்பர்

க.ரா தின் வேறுபெயர்
கம்பநாடகம்,கம்பசித்திரம்

காண்டங்கள்? 6
பால
அயோத்தியா
ஆரண்ய
கிஷ்கிந்த
சுந்தர
யுத்தம்

இராமாயணத்தின் கடைசிக்காண்டம் எது?
யுத்தகாண்டம்

உத்திரகாண்டம் எத்தனையாவது காண்டம்?
7 வது காண்டம்

உத்திரகாண்டம் எழுதியவர் யார்?
ஒட்டக்கூத்தர்

அனுமன் சீதையைக்கண்ட காண்டம் எது?
சுந்தரகாண்டம்

கம்பராமாயண சிறுபிரிவு யாது?  படலம்

பெரும்பிரிவு?
காண்டம்

கம்பர் பிறந்த ஊர்?
தேரெழுந்தூர்

கம்பனின் நாடு?
சோழநாடு

கம்பர் வாழ்ந்த காலம்?
12ம் நூற்றாண்டு

கம்பன் படைத்த அந்தாதிகள்?
சரஸ்வதி அந்தாதி,
சடகோபர் அந்தாதி

வேறுநூல்கள்?
ஏரெழுபது
சிலையெழுபது
திருக்கை வழக்கம்

கட்டுத்தறி கவிபாடுமா?
கம்பன்வீட்டுக்கட்டுத்
தறி் கவிபாடும்.

மணிமுடிக்காண்டம்?
சுந்தரகாண்டம்

வான்மீகி ராமாயணத்தில்  இல்லாத காண்டம்?
உத்திரகாண்டம்

அனுமனிடம் இராமன் கொடுத்து சீதை பெற்றது?
கணையாழி

சீதை அனுமனிடம் தந்தது?
சூளாமணி

'ஏந்தல் தன் மொய்கழல் தொழுகிலன்'  ஏந்தல் யார்?
இராமன்

'முளரி நீங்கிய தையல்'
தையல்' தையல் யார்?சீதை

'வண்டுரை ஓதியும் வலியள் 'ஓதி யார்?
 கூந்தலுக்குரியவள் சீதை

'அனுமன் பன்னுவான்'
இதில் பன்னுவான் என்பதன் பொருள்?
உரைப்பான்.

'அண்டர்கள் துயரம் தீர்க்க'
அண்டர்கள் யார்?
தேவர்கள்

மன் பெரு மருகி (மருமகள்) மருகி யார்?
சீதை

மிதிலையின் வேந்தன் யார்? ஜனகன்

வேலை என்பதன் பொருள்? கடல்

சீதை இலங்கையில் இருந்த இடம்?
அசோகவனம்

அசோகவனத்தில் சீதை இருந்த இடம்?
உம்பி தொடுத்த பர்ணசாலை

உம்பி யார்? இலக்குவன்

உம்பி இலங்கையில் பர்ணசாலையை அமைத்தானா?
ஆம்.சீதையைக்
கவரும் முன்னர் நிகழ்ந்தது.

அலங்கல்வேல் வேந்தன் யார்?
இராவணன்

'ஆருயிர் துறப்பு  உன்னினான்'
உன்னினான் பொருள்
எண்ணினான்

'தடுத்து நாயேன்'
நாயேன் யார்?
அனுமன்

'இறுதியின் மருந் தீயும் மருந்து' இதில் மருந்து எது?
கணையாழி (மோதிரம்)

'வஞ்சர் ஊர்' எது?
இலங்கை

'வீங்கினள் வியந்த தல்லால் இமைத்திலள்'
இமைக்காதவள் யார்?
சீதை

'திங்களொன்று இருப்பன்' இதில் திங்கள் குறிப்பது?
மாதம்

மலரடி சென்னி வைத்தவள் நோக்கி வணங்கினாள் யார்?
சீதை

எந்த திசை நோக்கி?
இராமன் இருக்கும் திசை

'வித்தகக்காண்டி' இதில் வித்தகன் யார்?
இராமன்

நின்பெயர் புகன்ற போழ்தின் -நின் குறிப்பது? இராமனை

அசோகவனத்தில் அரக்கியர்க்கு மயக்கமூட்டியது எது?
அனுமனின் மந்திரம்

'கண்ணீர்க்கடலில் குளித்தாள் 'யார்
சீதை

குறிப்பால் உணரும் கொள்கையான் யார்?
இராமன்

'அவன் செயல் தெரிய நோக்கினான் ' அவன் யார்? அனுமன்

நோக்கியவன் யார்? இராமன்

என்ன செயல்?

தென்திசை நோக்கி வணங்கினான் அனுமன். தென்திசையில் சீதை இருக்கிறாள் என்பதை குறிப்பால் உணர்த்தினான் அனுமன்.

'தாமரைக்கண்கள் ஆர'
யாருடைய கண்கள்?
இராமனது


வேத நன்னூல் உய்த் துள காலமெலாம் புகழோடு ஓங்கி நிற்பான் யார்?
அனுமன் 

1 comment:

  1. சிறப்பான குறிப்புகள்

    ReplyDelete