Friday, June 16, 2017

IAS

துணை ஆட்சியர்  பதவி   IAS, IPS பதவிகளை  விட மதிப்பு மிக்கது.
 (தமிழ்நாட்டில் கடந்த  5 ஆண்டுகள்    மட்டும்)

Deputy Collector  is Costlier than IAS, IPS  (Tamilnadu  only  - For the past 5 years)

1) பெண் கூலி தொழிலாளி மகன் மணிகண்டன், IAS ஆனார்
2) சைக்கிள் கடை வைத்திருந்தவரின் மகன் குலோத்துங்கன், IPS  ஆனார்
3) காபி கடை வைத்திருந்தவரின் மகன் விஷ்ணு, IAS  ஆனார்
4) பிளாஸ்டிக் வியாபாரம் செய்பவரின் மகன் மணிமாறன், IAS  ஆனார்
5) பஞ்சு வியாபாரம் செய்பவரின் மகள் திவ்யா, IAS  ஆனார்
6) கார் டிரைவர் மகள் வான்மதி, IAS  ஆனார்
7) சர்வர் வேலை பார்த்த ஜெயகணேஷ், IAS  ஆனார்
8) பரோட்டா கடையில் வேலை பார்த்த வீரபாண்டியன் IAS ஆனார்

 

தமிழ்நாட்டில்  கடந்த 5 ஆண்டுகளாக GROUP 1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியர் பதவி பெற்ற பெரும்பான்மையான (துணை ஆட்சியர் பதவி பெற்ற பலரில் சிலர்)

1) Additional Commissioner (Commercial Tax) மகள் துணை ஆட்சியர் ஆனார்
2) மாவட்ட நீதிபதி மகன் துணை ஆட்சியர் ஆனார்
3) பேரூராட்சி தலைவர் மகள் துணை ஆட்சியர் ஆனார்
4)  S.P மகன் D.S.P ஆனார்
5) அரசு மாநில கல்லூரி முதல்வர் மகள் துணை ஆட்சியர் ஆனார்
6) பள்ளி தாளாளர் மகன் துணை ஆட்சியர் ஆனார்
7) தொழிலதிபர் மகன் துணை ஆட்சியர் ஆனார்
8) I.A.S. அதிகாரி மகள் கடந்த மாதம் A.D.PANCHAYAT,    அடுத்த மாதம்  துணை ஆட்சியர்
9) I.Fo.S  அதிகாரி மகன் கடந்த மாதம் A.D.PANCHAYAT,  அடுத்த மாதம் துணை ஆட்சியர்

இதிலிருந்து அனைவருக்கும் தெரிந்திருக்கும், GROUP 1 (DEPUTY COLLECTOR)பதவி, IAS  ஐ விட மதிப்பு மிக்கது என்று.

உயரதிகாரிகள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகளின் மகன்/மகள்கள் தமிழகத்தில் GROUP 1, தேர்வில் வெற்றி பெற்று துணை  ஆட்சியர் ஆக முடிகிறது, ஆனால் அவர்களால்  அகில இந்திய அளவிலான    IAS,IPS  தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. (EXCEPTIONS ARE NOT AN EXAMPLE)

ஆனால் அதே GROUP 1 தேர்வில் வெற்றி பெற்று, கடைசி கட்ட பதவிகளான  A.D.PANCHAYAT, DRCS   போன்ற பதவிகளை பெற்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜெயசீலன், இளம்பகவத், அம்ரித், கனக சுப்பு ரத்தினம் போன்றவர்களால் UPSC தேர்வில் வெற்றி பெற்று IAS, IPS, IRS  போன்ற பதவிகளை பெற முடிகிறது.

கூறியது போன்று "தமிழகத்தில் சிஸ்டமே தப்பாக இருக்கிறது"   என்பது சரி என்றே தோன்றுகிறது.

(குறிப்பு:சமீபத்தில் வெளிவந்த GROUP 1 முதன்மை தேர்வில் (MAIN EXAMINATION) பணம் கொடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டு விடைத்தாள்கள் மாற்றப்பட்டதாக தினமலரில் வெளிவந்த செய்தியும் தேர்வர்களை யோசிக்க வைக்கிறது)

No comments:

Post a Comment