கருணைப் பணி நியமனத்தில் ஆண், பெண் பாகுபாடு கூடாது
31-01-2017
மதுரை:
கருணைப் பணி நியமனத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு காட்டக்கூடாது, என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
.ஆலங்குளம் அருகே பூலாங்குளம் முத்துச்செல்வி தாக்கல் செய்த மனு:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் எனது தந்தை வேல்முருகன் வாட்ச்மேனாக பணிபுரிந்தார். அவர் 2012 ல் இறந்தார். எனக்கு திருமணம் முடிந்துவிட்டது. எனது தாயிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்று, வாரிசுப் பணிக்கு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகத்தில் விண்ணப்பித்தேன். அதன் நிர்வாக அதிகாரி,'உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதால், கருணைப் பணி வழங்க முடியாது,' என 2016 ல் நிராகரித்தார். அதை ரத்து செய்து, கருணைப் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு முத்துச்செல்வி மனு செய்திருந்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.மனுதாரர் வழக்கறிஞர், “ஆண் வாரிசாக இருக்கும்பட்சத்தில் திருமணம் செய்தாலும், கருணைப் பணி வழங்குவதில் தடையில்லை. மக்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்குவதில் சமமாக செயல்பட வேண்டும், என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின்படி பெற்றோரை பராமரிப்பதில் ஆண், பெண் வாரிசுகளுக்கு சமமான கடமை, பொறுப்பு உள்ளது,” என்றார்.நீதிபதி: கருணைப் பணியில் ஆண், பெண் என்ற பாகுபாடு
காட்டக்கூடாது. நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் மனுவை பரிசீலித்து, காலிப் பணியிடங்களில், மனுதாரரின் கல்வித் தகுதிக்கேற்ப 2 மாதங்களில் கருணைப் பணி வழங்க, பரிசீலிக்கவேண்டும், என்றார்.

சார் வணக்கம் வாட்ஸ்ஆப் நம்பர் கொடுங்கள் நன்றி!!!
ReplyDelete